ஜெயமோகன் அவர்களுக்கு,
வெண்முரசில் வரும் சூதர்பாட்டுகள் அந்த கதைச்சந்தர்ப்பத்திற்கு ஆழமான அர்த்ததை அளிக்கின்றன. அதை வாசகர்கள் அறிவார்கள். ஆனால் சாதாரணமான சம்பவங்களும் அப்படி இணைந்திருப்பதை நான் கவனித்ததில்லை
கிருஷ்ணன் ஒரு வணிகன் கடைமுன்னால் உப்பைப்போடுவதை பற்றிச் சொல்லக்கூடிய இடம்தான் ஆகா என்று எண்ணவைத்தது. அதாவது ஆசையால் அளவு மீறிபோகலாம். ஆனால் அச்சத்தால் அளவுமீறிப்போகவேகூடாது
நாம் பலசமயம் இதைத்தான் செய்கிறோம். எதிரி என்றால் நாலு அடி கூடவே போடுகிறொம். மிகவும் எச்சரிக்கை ஆகி பெரிய சந்தேகங்களை அடைகிறோம். எதிரியை மிகைப்படுத்திக்கொள்ளாத மனிதனே இல்லை அதன் விளைவாகவே அழிவு.
மகாபாரதத்தில் ரெண்டு தரப்பும் செய்வதும் ஒன்றைத்தான். எதிரியை மிகையாக ஆக்கிக்கொண்டே செல்கிறார்கள். அந்த மனநிலையை சுட்டிக்காட்டிவிடுகிறான் கிருஷ்ணன்
ராஜம்