Wednesday, April 1, 2015

அந்த உறவு




ஜெ


திரௌபதிக்கும் துரியோதனனுக்கும் உள்ள உறவின் நுட்பத்தை ஒருவாசகர் எழுதியபிறகுதான் நானே புரிந்துகொண்டேன். அது எனக்கு ஆச்சரியம் அளித்தது. அதன்பிறகுதான் என் அப்பாவின் கதையையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

என் அப்பாவுக்கும் ஒரு நாயக்கமார் வீட்டு பெண்மணிக்கும் நெருக்கம் இருந்தது. ஊரே அவதூறாகப்பேசியது. என் அம்மா மூன்றுமுறை தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். எங்கள் குடும்பத்தில் பல பிரச்சினை. அந்த பெண்மணிக்கும் வளர்ந்த மகன்கள் உண்டு. அவர் தனியகாவே விவசாயம் செய்துவந்தவர். கம்பீரமான பெண். அவர் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை

அப்பா பலமுறை குலதெய்வக்கோயிலில் எல்லாம் சத்தியம் செய்தார். ஆனால் அவர்களை பார்க்காமல் இருக்கமுடியாது. அது காதல் கிடையாது. அந்தப்பெண்மணி அப்பாவுக்கு குருமாதிரி இருந்த ஒருவரின் மனைவி. காமமே இல்லாத உறவு என்று அப்பா நண்பர்களிடமெல்லாம் சொல்லியிருக்கிறார்

அப்பா செத்தபிறகு துட்டிக்கு வந்தபோதும் அந்தப்பெண்மணி அதில் காமமே இல்லை என்று என் அம்மாவிடம் சொன்னாராம். அம்மா காறித்துப்பிவிட்டார். அப்பா அவர்களுக்காக மிச்ச எல்லாத்தையும் இழந்தார். ஆனால் அவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருந்தார்

அந்த அம்மாபெயர் கிருஷ்ணம்மாள். என் தங்கச்சிக்கு அப்ப போட்ட பெயர் கிருஷ்ண பிரியா. வெண்முரசிலே இந்த இடம்தான் என்னை எழுதவைத்தது. தப்புதப்பாக இருக்கும். பெயர் போடவேண்டாம்

சி