Saturday, April 11, 2015

நிழலின் நிறம்

ஜெ,

வெண்முரசின் உபதலைப்புகளை அதிகம் கவனிப்பதில்லை. அவை கதைக்கு அளிக்கும் மேலதிக அர்த்தங்கள் முக்கியமானவை. உதாரணம் பகடையின் எண்கள்

இப்போது வரும் அத்தியாயத்தின் தலைப்பு நிழல்வண்ணங்கள். நிழலுக்கு வண்ணம் உண்டா என்று கேட்டபோது உண்டு என்றும் நிழலை உருவாக்கும் ஒளியின் இயல்புக்கு ஏற்ப நிழலின் வண்ணம் மாறுபடும் என்றும் அது பூரிசிரவஸின் இயல்பையும் துரியோதனனின் இயப்லையும் குறிக்கிறது என்றும் சொன்னீர்கள்

எனக்கு சந்தேகமாக இருந்தது. நிழல் கரிய நிறம் கொண்டது என்றே நினைத்தேன். https://www.youtube.com/watch?v=zWS4-OvbpR0. என்ற வீடியோவைப் பார்த்தேன். நீங்கள் சொன்னது சரி தான் நிழல்களுக்கு நிறங்கள் உண்டு . இது எனக்கு ஒரு ஆச்சர்யமான அறிதல். ஒரு காவியத்தைப் படிப்பதன் பலன்களில் இதையும் சேர்த்துக்  கொள்வோம் .    

கிருஷ்ணன்