Monday, April 6, 2015

தலைவாங்கி




ஜெ

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

திரௌபதியின் ஆளுமையை நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விதத்தை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். நுட்பமான குறிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அத ஒவ்வொரு கதைக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஊகித்து வாசிப்பதென்பது ஒருவகையிலே இந்திய ப்பண்பாட்டையே மறுபடியும் வாசித்துப்புரிந்துகொள்வதுபோல என்று நினைத்துக்கொண்டேன்

ஒவ்வொருநாளும் வாசிப்பது கஷ்டமாக இருந்தது. வேலைகாரணமாக பல அலைச்சல்கள். ஆகவே நான் எப்போதுமே ஒரு நாவல் முடிந்தபிறகுதான் மொத்தமாக வாசிப்பேன். ஆனால் பிரயாகை முடிந்ததும் வெண்முகில் நக்ரத்தை வாசிக்காமலிருக்கமுடியவில்லை. அதன் தொடர்ச்சியானந் நாவல் இது என்ற எண்ணம் வந்தது

திரௌபதியை ஐந்துகுழல்கொண்ட அன்னையாகவும் அரசியாகவும் ஆசைகொண்ட பெண்ணாகவும் 3 dimension னில் காட்டுகிற வெண்முரசு வாசிப்பதற்கு ஓர் அருமையான அனுபவம். ஒரு தவம் என்று தோன்றியது

திரௌபதிக்கும் பீமனுக்குமான உறவில் இருக்கும் நெருக்கம் வேறு எதிலும் இல்லை. இன்னொன்றும் தோன்றியது அவள் ஐந்துமடங்கு பெரிய ஆளுமை. ஐந்துபேர் இருந்தாலும்கூட அவளுக்குள் இருக்கும் பெண்களை நிறைவுசெய்யமுடியவில்லை. தலையை வெட்டிக்கொடுக்கும் ஆண் இருந்தால்தான் அவளுக்குப்பத்தும்

அந்தத் தலையைவெட்டிக்கொடுப்பவன் கர்ணனுக்குச் சமானமானவன் என்றும் நினைத்தேன். கர்ணன் கொஞ்சம் காலம் கழித்து தலையைவெட்டிக்கொடுத்தான் அவ்வளவுதான்

செந்தில்