Monday, April 6, 2015

உரையாடல்





அன்புள்ள ஜெ, வணக்கம் நலம்தானே? இதுவரை வந்துள்ள உரையாடல்களிலேயே சல்லியர் மற்றும் பூர்சிரவஸ் இடையே நிகழ்ந்தது மிகவும் அருமை. கம்பி மேல் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் மதித்து பொருளார்ந்து அதுவும் இருவரும் மற்றவரை ஆழம் பார்ப்பதாகவும் இருந்தது. பின்னால் பாரதப்போரில் பூர்சிரவஸ்  சாத்யகியை கொல்லப்போகும் போது அர்ச்சுனன் அம்பால் பூர்சிரவஸின் கை துண்டிக்கப்படுவதையும் இப்போதே குறிப்பால் காட்டி விட்டீர்கள். அது சரி ஏன் பலராமனை ஒரு கோமாளி போல் காட்டி விட்டீர்கள்

வளவதுரையன்

அன்புள்ள வளவதுரையன்,

பலராமர் கோமாளியாகக் காட்டப்பட்டிருப்பதாக நினைக்கவில்லை. சூழ்ச்சிகளோ தந்திரங்களோ அறியாத நேரடியான மனிதராக மட்டுமே காட்டப்பட்டிருக்கிறார். கிருஷ்ணனுக்கு நேர்மாறாக

ஜெ