Friday, April 3, 2015

இறைவர் இருவர்



ஜெ,

நலம்தானே? நானும் நலமே. வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கிறேன். சமீபத்தில் ஒரு குடும்ப நிகழ்ச்சி காரனமாக வாசிப்பது விட்டுப்போய் மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன். இப்போதுதான் திரௌபதி சுயம்வரம் வாசித்தேன். திரௌபதியின் ஆளுமையை சொல்லியிருக்கும் நுட்பங்களை மீண்டும் பலமுறை கவனித்தேன். அவளில் இருப்பது ஒரு தெய்வத்தனம். இந்த மொத்தநாவலிலும் நீங்கள் கிருஷ்ணனுக்கும் திரௌபதிக்கும் மட்டுமே அந்த தெய்வத்தன்மையை அளித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்

இரண்டுபேருமே கருமையாக இருப்பது முக்கியமானது என்று தோன்றியது. நம்முடைய கருவறைத்தெய்வங்களெல்லாமே கருப்பானவை அல்லவா? வர்கள் வேறு நிறத்தில் இருந்திருந்தால் நாம் அவர்களை தெய்வங்களாக நினைக்கவே முடியாமலாகியிருக்கும் என நினைத்துக்கொண்டேன். அந்தவில்லை திரௌபதியின் மனமாக உருவகித்து வாசித்தபோது அந்த அத்தியாயம் முழுக்க உருவான அழகை வர்ணிக்கவே வார்த்தைகள் இல்லை

செல்வராஜ் மாரிமுத்து