ஜெ சார்
வெண்முரசில் பிரயாகையை இப்போதுதான் முடித்தேன். வழக்கமான வெண்முரசு நாவல்கள் முடியும்போதெல்லாம் ஒரு சோர்வுதான் வரும். இனிமையான சோர்வுதான். பெரிய வாழ்க்கையை வாழ்ந்து முடித்ததுபோலவும் இனிமே ஒன்றுமே அறிவதற்கு மிச்சமில்லை என்பதுபோலவும் தோன்றும்
ஆனால் பிரயாகை முடிந்தபோது வேறு ஒருமனநிலை இருந்தது. ஒரு தனிமை. அதே சமயம் இன்னும் இன்னும் என்ற எழுச்சியும் இருந்தது. அது திரௌபதியின் கதாபாத்திரத்தால்தான் அப்படித் தோன்றுகிறது என்று நினைத்தேன்
திரௌபதியை ஒரு பெண்ணாகவும் கொற்றவையாகவும் ஒரே சமயம் காட்டும் புனைவுமுறை திகைப்பையும் ஈர்ப்பையும் அளித்தது. இந்த காவியத்தில் திரௌபதிதான் எல்லாமே.
இதர்குமுன் குந்தி அதற்கு முன் சத்யவதி எல்லாம் வந்தபோது இனிமேல் திரௌபதி வந்து ஒளிமங்கிவிடுவாளோ என்று நினைத்தேன். சான்ஸே இல்லை என்று தெரிகிறது
சத்யா