அன்புள்ள ஜெயமோகன்,
கிட்டத்தட்ட 1.4 வருடங்கள் ஓடி விட்டது இந்த பயணம். ஒரு புறம் மூளையின் செல்களின் அளவுகளை முழுதும்திணற அடிப்பதாக, இடம் இல்லை என்று தோணும் படியாக ஒவ்வொரு பகுதியின் பாத்திரங்கள், வர்ணனையின்நுணுக்கங்கள், விரியும் உலகுகள், பிணையும் ஊழின் விளையாட்டுகள், தகவல்கள் , ஒவ்வொரு பாத்திரங்களின்மாற்றங்கள், அக பரிமாணங்கள், வளரும் ஆளுமைகள் மற்றொரு புறம் விவாத தளங்களில் வரும் கடிதங்களில்தெரியும் புதிய பார்வை மற்றும் கோணங்கள் ....
விட்டு தள்ளி போய் விட்டது எனும் படியாக ஒரு ஏக்கம் பரவுகிறது இந்த வெண்முரசு எனும் பெரிய கலம்.இறக்கும் போது நினைத்து பார்த்து நிறைந்து மலர்ந்து சிரித்து சாகும் படியா க ஒரு எழுத்து தவ வாழ்வை உங்களின் மேல் இறக்கி வைத்து சென்ற உங்களின் அம்மையை நினைத்து கொண்டேன். வாழ்த்துக்கள் மீண்டும்
அன்புடன்
லிங்கராஜ்