Monday, April 6, 2015

குழந்தைக்கதை



ஜெ

சமீபத்தில் வாசித்ததில் அற்புதமான இடம் சகலபுரியின் வர்ணனை. அதன் அமைப்பு, அங்கே செல்லும் பாதை, அங்குள்ள ஏற்பாடுகள் அனைத்துமே மிகநுட்பமாக காட்சியாக உள்லன. உண்மையிலேயே அங்கே சென்று அபப்டி ஒரு தாவரத்தாலான கோட்டையைக் கண்டு வந்தது போல உணரமுடிகிறது. உண்மையில் எங்கோ அப்படி ஒரு கோட்டை இருக்கிறது என்ற உணர்வை அடைந்தேன். அற்புதமான இடம் அது

வெண்முரசில் வரும் கோட்டைகளும் நகரங்களும் ஒவ்வொருமுறையும் அதிர்ச்சி அளிக்கும்படி வேறுபட்டிருக்கின்றன. அங்கே ஒரு சிறுகுழந்தைக்கான ஃபேண்டஸியை எப்போதுமே வைத்திருக்கிறீர்கள் நீங்கள். அதுவ்தான் வெண்முரசை உயிர்ப்புடன் வாசிக்கவைக்கிறது. எங்கே வெண்முரசு முதிர்ச்சியுடன் செல்கிறது எங்கே குழந்தைகளுக்குரிய கனவுடன் செல்கிறது என்று ஊகிக்கவே முடியதில்லை

அந்த பச்சைக்கோட்டைக்குள் போனதுமே கதை மாறிவிடுகிறது. சீரியஸன ராஜதந்திர விஷயங்கள் நுட்பமாக பேசப்படுகின்றன. இப்படி ஒன்றில் இருந்து சம்பந்தமே இல்லாத இன்னொன்றுக்கு போவதே இந்நாவல்களின் பெரிய கவர்ச்சி என நினைக்கிறேன்


சுகுமார்

அன்புள்ள சுகுமார்

ஒரே சமயம் குழந்தைக்கதையாகவும் பிற அனைத்துமாகவும் இருப்பதே செவ்விலக்கியம்

ஜெ