Tuesday, April 7, 2015

இழத்தல்



ஜெ

பூரிசிரவசின் வாழ்க்கையைப்பார்க்கும்போது சகுனியுடன் கிருஷ்ணன் ஆடிய சூதாட்டம் நன்றாகவே புரிகிறது. ஒருபக்கம் பகடை உள்ளது. அதில் என்ன விழும் என்பது நம் கையில் இல்லை. நமக்கு விழுவதை வைத்துக்கொண்டு நாம் ஆடவேண்டும். அதில் நம் சாமர்த்தியத்தைக் காட்டவேண்டும். அதில் எது அடைகிறோமோ அதுவே வாழ்க்கை

அதாவது வாழ்க்கை என்பது விதிக்கும் மதிக்கும் இடையேனான ஒரு போராட்டம். அதை பூரிசிரவஸ் சரியாகத்தான் விளையாடுகிறான். ஆனால் ஒன்றுமே செய்வதற்கில்லை. எல்லாமே வேறு வேறு வகையாக போகின்றன. செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை

அவன் ஒவ்வொரு இளவரசிகளாக இழந்துகொண்டே இருக்கிறான். அவ்வாறு இழக்கப்பட்டவர்கள் எல்லாம் அவன் மனசுக்குள் வளர்ந்துகொண்டே இருப்பார்கள் . அவர்களிடமிருந்து அவனுக்கு விமோசனமே இல்லை, நம் மனசு என்பதே நாம் இழந்தவர்களாலும் இழந்தவைகளாலும் ஆனதுதானே?

ஜெயராமன்