ஜெ,
துரியோதனனின் மனநிலையில்
வரும் மென்மையான மாற்றங்கள் ஆச்சரியமளிக்கின்றன. எந்தக் கரும்பாறைக்குள்ளும் காதல்
மெல்லிய வேர்க்கொடி போல நுழைந்துவிடும் என்ற எண்ணத்தை அளிக்கின்றன அவை. துரியோதனன்
வானத்தைப்பார்த்தபடி நின்று பேசுவதும் அவனுடைய தத்தளிப்பும் ஏக்கமும் எல்லாம் அற்புதமாக
பதிவாகியிருக்கின்றன
ஆச்சரியமான விஷயம்தான்
இது. பூமியில் ஒரு பெண்மேல் காதல் வந்தபிறகுதான் அவனுக்கு வானத்தைப்பார்க்கவே தோன்றுகிறது.
மண்ணிலே இனிமையான வாழ்க்கை வாழும்போதுதான் மூதாதையரை நினைக்கிறான். கசப்பும் பழியும்
நிறைந்த மனதுடன் இருந்தபோது அவனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை இல்லையா?
சுவாமி