Thursday, April 9, 2015

கர்ணனும் கலைகளும்



மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். சில விஷயங்கள்.

1) வெண்முரசில், 64 கலைகளில் பல கலைகள் வந்து விட்டன. கீதம், வாத்தியம், நிருத்யம், அணி செய்தல், வாஸ்து போன்றவை நான் கவனித்தது. மற்றவையும் வரும் என நினைக்கிறேன்.
http://en.wikipedia.org/wiki/Hindu_art

2) பல நாட்டு வணிகர்கள் (பீதர்கள், யவனர்கள் மற்றும் பலர் ) வருகிறார்கள். மற்ற நாட்டு புத்தகங்களில் மகாபாரதம் பற்றி ஏதேனும் குறிப்புகள் உள்ளனவா ?

3) கர்ணனின் அங்க நாடு பற்றியும் அவன் ஆட்சி முறை பற்றியும் வரும் என எதிர்பார்க்கிறேன்.

ராஜாராம் சாரங்கபாணி

அன்புள்ள ராஜாராம்

கலைகள் எல்லாமே வரும். ஆனால் புனைவின் பகுதியாகவே வரும்

மகாபாரதத்தில் நேரடியாக பீதர் யவனர் பற்றிய குறிப்புகள் இல்லை. அவை பிற்கால இடைச்செருகல்கள் என்பவர்கள் உண்டு

கர்ணன் அடுத்த நாவலில் வருவார்

ஜெ