Thursday, April 9, 2015

வாழ்க்கை நடனம்




சௌதி அரேபியா பெரும்பாலை நிலம் என்பதால் பெரும்கோடை இருக்கும் என்று நினைத்த எனக்கு பெரும் குளிர் கண்டு திகைத்தேன். பெரும்கோடையும், பெரும் குளிரும் கொண்ட மண், ஒரு அடி உயரத்திற்கு ஆலங்கட்டி மழைபெய்து அதிசயவைக்கும் மண். சூரியனுக்கே குளிரும் என்று நினைக்கும் அளவுக்கு உச்சிமண்டையில் சூரியன் விழித்திருக்கும்போதும் உடம்பின் ஒவ்வொரு அணுவும் குளிரும், ஒவ்வொருவர் அணிந்திருக்கும் குளிராடையில் அதிகமாக காணப்படும் வாசகம் “ICE FIRE” என்பது.

சில உண்மைகள் வார்த்தைகள் ஆகும்போது அந்த வார்த்தை அன்றி வேறு ஒன்றும் இல்லாத கணமாக அந்த காலம் ஆகிவிடும். பூரிசிரவஸ் வாழ்க்கையில் வந்து உறையும் இந்த ஐஸ் பயரைக்கண்டு அதிசயத்தேன். காதல் முறிவு என்பது கால் வெட்டப்பட்டு மழையில் நினைந்து, பனிக்கட்டி எனக்குளிர்ந்துபோவது என்பது எத்தனை பெரிய உண்மை. குளிரின் கொடுமையை அனுபவித்துதான் உணரமுடியும். எல்லா காயத்தின் வலியையும் உணரவைத்துவிடமுடியும், குளிரின் இம்மைசை அனுபவித்து அறியமுடியும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வலி. காதல் தோல்வியும் வெட்டப்பட்ட கால் பனிக்கட்டியாகும் வலிதான்.  

தனது வாழ்க்கையை மூன்று தளத்தில் வைத்து கண்டுக்கொள்ளும் பூரிசிரவஸ் நினைவு, கனவு, கனவுக்குள் கனவு என்று போகும் வழிமுறைகளால், புலன், மனம்,சித்தம் என்று செல்கின்றான்.

இந்த கனவு ஒரு அற்புதம் ஜெ. பூரிசிரவஸ் முதலில் கேட்பது சித்தத்தில் இருக்கும் காதலியின் குரலை, காதல் கால் ஒடிந்துப்போனதை, இரண்டாவது கண்டது காதல்தோல்வியை உண்டாக்கியவனை,மூன்றாவது விழித்துக்கொண்டு காண்டது யதார்த்தத்தை.

யதார்த்தத்தில் நடப்பது தேவிகையின் சுயவரத்திற்கு பூரிசிரவஸ் பயணப்படுவது. இரண்டாவதாக அறிவது பீமன் போர்த்தொடுத்து வந்தது. மூன்றாவதாக அறிந்தது தேவகி தலையாடாமல் முகம்மூடி சென்றது. அப்போது அவள் மனதில் ஒளித்தக்குரல் இளவரசே..இளவரசே என்பதுதான்.

அன்புள்ள ஜெ, வாழ்க்கை என்பது முன்னமே உணர்ந்ததை அல்லது கனவுக்கண்டதை பின்னால் அறிந்துக்கொள்வதுதானா? அந்த கனவுதான் மனிதனை வாயில் நுரைதள்ளத்தள்ள ஓடச்சொல்கின்றதா? அந்த கனவு உண்மையாகும் தருணம்வரை ஓடுவதுதான் வாழ்க்கையா? வெற்றித்தோல்வி என்பது நம்பிடம் இல்லை ஓட்டம் மட்டுமே நம்மிடம் உள்ளது. கனவுகள் உண்மயாகும் தருணத்தில் வாழ்க்கை கனவாகும் இந்த விந்தையை எண்ணி எண்ணி பார்க்கின்றேன்.

கனவு கீழிருந்து மேலே வருவது அல்லது அகத்திலிருந்து புறத்திற்கு வருவது, யாதார்த்தம் என்பது மேலிருந்து கீழே செல்வது அல்லது புறத்திலிருந்து அகத்திற்கு செல்வது. பூரிசிரவஸின் கனவு என்ன ஒரு அற்புத வாழ்க்கை நடனம். 

  

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்