Tuesday, April 7, 2015

ஆட்டம்



ஜெ சார்,

பூரிசிரவஸ் கிளம்பும்போதே சலன் சொன்னான். அனுபவம்தான் பெரிய ராஜதந்திரம். ஆகவே வாயை விடாதே என்று. என்ன நடந்தது என்று பார்க்கும்போது அது தெளிவாகவே தெரிகிறது. அவன் வாயைக்கிண்டி அவனைப்பெசவிட்டு மாட்டிவிடுகிறார் சல்யர்

என்னென்ன உத்திகள். முதலில் அவனுடைய அகங்காரத்தை புண்படுத்துகிறார். அதன் பிறகு ஆணவமாகப்பேசி அவனை சீண்டுகிறார். அதன்பின் பூடகமாகப்பேசி அவனைக்குழம்பச் செய்கிறார் அவனும் பூடகமாகப்பேசி அதிலேயே போகும்போது சடாரென்று நேரடியாகப்பேசி அவனை நிலைகுலைய வைக்கிறார்

மேனேஜ்மெண்ட் தியரிகளெல்லாமே இங்கே இருக்கின்றன. ஒன்றுமே செய்யமுடியாது. அந்த தோரணை விளையாட்டு. கடைசியில் போர்க்களத்திலே பார்ப்போம் என்ற அந்த தெனேவெட்டான பேச்சு. சல்யர் பூ என்று அவனை ஊதிவிட்டுபோய்விட்டார்

அவனும் அவரை நன்றாகவே கவுன்டர் செய்தான். அவருக்கு அவன் வைத்த ஆப்புகளெல்லாமே சரிதான். ஆனால் பழதின்னு கொட்டைபோட்ட அனுபவம் அவ்னை தோற்கடிக்கிறது. அத்துடன் அந்தச்சபையைப்பற்றி அவருக்கு நன்றாகத்தெரியும் கடைசி ஆயுதமாக அதைத்தான் அவர் வைத்திருக்கிறார் அதைவைத்து அடித்துவிட்டார்

ஆனால் பூரிசிரவ்ஸ் விஜயையும் இழந்தபோது பெரிய பரிதாபம் வந்தது

மனோ