Monday, April 13, 2015

ஆட்டம்



ஜெ சார்

பானுமதியை துரியோதனன் கைப்பற்றும் இடம் மீண்டும் ஒரு பரபரப்பான சாகசக்கதை. வெண்முரசு திடீரென்று சாகசக்கதையாக திடீரென்று ராஜதந்திரக்கதையாக திடீரென்று பெண்களின் கதையாக மாறிக்கொண்டே இருக்கிறது. அதுதான் அதன் சிறப்பென்றே நினைக்கிறேன். குழந்தைக்கதைப்பகுதிகூட வந்தது. இடும்பன் வந்தபோது ஒட்டுமொத்தமாக இதற்கப்பால் ஒன்றும் வாசிக்கவேண்டியதில்லை என்பது போலச் சூழ்ந்துகொண்டிருக்கிறது வென்முரசு

அந்தச்சாகசத்தில் விதி விளையாடுகிறது அந்த இளவரசிக்கு பீமனைத்தான் விதி சொல்லிவைத்திருக்கிறது. துச்சாதனனின் கைவரை வந்தபின் திரும்பிப்போய்விட்டாள். என்ன சொல்ல ? ஒரு பெரிய கிரிக்கெட் ஆட்டத்தைப்பார்த்ததுபோலிருந்தது
வாழ்த்துக்கள் ஜெ சார்


கணேஷ்