ஜெ
விருத்திராசுரனை
இந்திரன் கொன்றகதைதான் தேவாசுரமோதல்களிலேயே மிகவும் பழைமையானது என்பது வேத ஆய்வாளர்களின்
கருத்து. ரிக்வேதத்திலேயே உள்ள கதை இது. இந்தக்க்கதையின் mode லேதான் அத்தனைகதைகளும்
பின்னாளில் அமைக்கப்பட்டன. ஆனால் விருத்திரன் கதையில் நிறைய நுட்பங்கள் உள்ளன. [தோத்தாதிரி அவர்கள் விரிவாக எழுதியிருக்கிறர்கள்]
விருத்திரன்
தூய்மையானவன் என்றும் நல்லவன் என்றும் வேதம் சொல்கிறது. அவனைக்கொன்றதனால் இந்திரனுக்கு
பழிவந்தது. அந்தப்பழியை வேதம் வழியாக அவன் தீர்த்தான். விருத்திரனைக்கொல்ல வருணன் உதவிசெய்தான்.
அதனால் அவன் தேவன் ஆனான். அப்படியென்றால் விருத்திரன் யார்? அசுரனாக இருந்தாலும் அவன்
ஒரு மூதாதை. ஆனால் பின்னாளில் விருத்திரன் கதையுடன் ததீசியின் கதை இணைக்கப்பட்டது.
அசுரர்கள் இன்னொருவகை மக்கள் என்னும் அடையாளம் மறைந்து அவர்கள் தீய சக்திகளாக ஆனார்கள்.
பின்னர் அவர்கள் உருவகங்களாக ஆனார்கள்.
நீங்கள் இங்கிருந்து மீண்டு அங்கே செல்கிறீர்கள்.
எல்லாவகை கதைகளையும் ஒன்றுடன் ஒன்று பின்னி இந்தக்கட்டமைப்பை உருவாக்குகிறீர்கள். இந்துமதம்
உருவான விதமே இந்தக்கதையிலே உள்ளது என நினைக்கிறேன்
செந்தில்ராஜன்