ஜெமோ
வெண்முரசு கிராதத்தை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிறமாக தெரிந்துகொண்டிருக்கிறது. ஆச்சரியம்தான்
யமனை அர்ஜுனன் சென்று சந்திக்கும்போது நினைத்தேன். மகாபாரதத்திலேயே இதற்கு ஒரு டெம்ப்ளேட்தான் இருக்கிறது. திரும்பத்திரும்ப ஒன்றைத்தானே சொல்லவேண்டியிருக்கும் என்று
ஆனால் குபேரனைச் சந்தித்தகதை முற்றிலும் வேறாக இருந்தது, அதில் போரே இல்லை. பொருளாதார ஆட்டம். அடுத்து என்ன வரும்?
ஜெயக்குமார்