அன்புள்ள ஆசிரியருக்கு ,
கிராதம் - அர்ஜுனனின் பயண காட்சிகள் நம்மையும் அங்கே கூடவே அழைத்து செல்கிறது .
அவன் இப்போது ஈரான் , ஈராக் கடந்து ஜோர்டான் வழியாக இறந்த கடலை போய்க்கொண்டிருக்கிறான் என தோன்றுகிறது . அவன் புறப்பயணம் மட்டுமல்லாமல் அகப்பயணத்தையும் நம்மோடு சேர்த்து செய்து கொண்டிருப்பதாகவே தங்கள் தூரிகை மூலம் அறிய முடிகிறது .
இவையெல்லாம் நடந்த காலத்தில் அங்கே வாழ்ந்த பூர்வ குடிகள் யார் ? அனேகமாக யூதராக இருந்திருக்கலாம் . இந்துக்களாக கூட இருந்திருக்கலாம் . காப்பிரிகள் என பல இடங்களில்
குறிப்பிடப்படும் இனக்குழு எது ? எவ்வளவு விஷயங்கள் ? மேற்கின் அதிபன் , மழையின் இறைவன் வருணன் இங்கே உப்புபாலையில் வாழ்வதாக சொல்வது தங்களின் கற்பனையா அல்லது எதாவது புராண ஆதாரங்கள் இருக்கின்றனவா ? நான் பணி நிமித்தம் வசிக்கும் பஹ்ரைனிலும் வருடம் சில நாட்கள் தான் மழை பெய்கிறது .
அன்புடன்
அ. கணேஷ்