அன்புள்ள ஜெமோ
நலம்தானே
வெண்முரசு கிராதம் வரை எப்படி வாசித்துக்கொண்டு வந்துசேர்ந்துவிடேன் என்று நினைக்கவே எனக்கு ஆச்சரியமகா இருக்கிறது. இத்தனை தூரம் நான் வாசிப்பேன் என்று நினைக்கவே இல்லை. எப்படியோ நடந்துவிட்டது என்று சொல்வதைக்காட்டிலும் மகாபாரதம் என்னும் பிரவாகமும் அதை மறு ஆக்கம் செய்யும் உங்கள் மொழியும்தான் காரணம் என்று நினைக்கிறேன்
இன்றையபாலைவனக்காட்சி, அருமை. வருணனை அறிய வெயிலை அறியவேண்டும். தாகத்தை அறியவேண்டும். வேழாம்பலும் மழைக்குருவிகளும்தான் அவனை அறிந்தவை என்னும் வரி மிக முக்கியமானது. வேழாம்பல் மழைக்காகத் தவம்செய்ய்யும் பறவை. மழைக்குருவி மழையை அறிவிக்கும் பறவை
மிக நுணுக்கமாக வாசித்துக்கொண்டே இருக்கவேண்டிய ஒரு படைப்பு இது. இதைப்பற்றி ஒரு அபிப்பிராயத்தைச் சொல்லவே ரொம்பநாளாகும்
எஸ் ஆர். சுப்ரமணியம்