ஜெ
கதைகளின் அமைப்பிலேயே கதைகளை மேற்கொண்டு வாசிப்புசெய்து ஊகிக்கவைக்கும்படி அமைந்துள்லதை கண்டு ஆச்சரியப்பட்டேன். திரிசிரசின் மூன்று முகங்களுக்கும் குகைக்குள் இருக்கும் மூன்றுபேருக்குமான ஒப்புமை நினைக்க நினைக்க ஆச்சரியமானது. வேதம்- கள் - தியானம். அதேபோல சூதர், வைதிகர், பிச்சாண்டவர்
கிராதத்தின் எல்லா கதைகளுக்குமே இந்த மூன்றுவடிவம் இருக்கிறது. வருணனும் இந்த மூன்றுவடிவங்களுடன் இருக்கிறான். இந்த மூன்று என்ற அம்சத்தைக் கவனித்ததும்தான் கிராதமே புரிய ஆரம்பித்த்து
சிவக்குமார்