ஜெ
வருணன் மேற்குதிசையின் அதிபன். அவன் ஏன் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறான் என்பதை நினைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இந்தியாவில் மழை தெற்கிலிருந்துதான். அப்படியென்றால் வருணன் ஏன் மேற்குத்தெய்வம்?
மழையின் அருமையை உணர்ந்த மேற்குப்பாலைவன மக்களின் தெய்வம் அது. ஆகவேதான் மேற்கே தெய்வமாக இருக்கிறான். சண்டன் அதைச் சொல்கிறான். அவன் அசுர தெய்வமாக ரிக்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறான் என்று. அதை அர்ஜுனன் காணவும் செய்கிறான்
அந்த இணைப்பு அபாரமானது
சிவக்குமார்