Thursday, November 24, 2016

நீருலகு

அன்புள்ள ஜெ

வெண்முரசின் உச்சம் இது என ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஒவ்வொருமுறையும் அது உண்மை என்றே தோன்றுகிறது

முழுக்கமுழுக்க கருணையாலானதாக நீரை சித்தரிக்கும் கவித்துவமான பகுதியை எத்தனைமுறை வாசித்தாலும் நிறைவுதான். கருணையே நீர். நீரென நெகிழ்ந்து பருப்பொருள் உருமாறியதே கருணையால்தான்

ஆனால் அந்தக்கருணைக்கு நஞ்சைத் தேடிச்செல்லும் குனமும் உண்டு. நீரை பாலைவனத்தில் வைத்து மட்டும்தான் இத்தனை உக்கிரமாக உணரமுடியுமெனத் தோன்றுகிறது

அர்ஜுனனின் அந்த வரிகள் கட்டவிழ்ந்து பெருக்காகச் செல்கின்றன

ரகு