ஜெ
நான் ஆப்ரிக்காவில் பணியாற்றிய காலகட்டத்தில் ப்ரிஹிஸ்டாரிக் காலகட்டத்தில் வற்றிப்போன ஏரிகளின் உப்பு பொரிந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது வெண்மையான அலைகளாகத்தான் இருகும். எனக்கு அடிப்பாவாடையின் லேஸ் போல என்று தோன்றியிருக்கிறது. அதை இன்று வெண்முரசிலே பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. அதை நீங்கள் நமீபியாவில் பார்த்திருப்பீர்கள்.
பாலைவனத்தில் அர்ஜுனனின் குணாதிசயம் கொஞ்சம் மாறுகிறது. பொதுவாக உறவுகளை பெரிதாகப்பொருட்படுத்தாமல்போகிறவன் அவன். இப்போது அவன் உறவுகலைப்பற்றி தீவிரமாக யோசிக்கிறான். மனம் நெகிழ்கிறான். இந்த மாற்றமும் நமக்கு உண்மையிலேயே பாலைவனத்திலே உருவாகும் விஷயம்தான்
நுணுக்கமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி
எஸ் காமராஜ்