Friday, November 18, 2016

நாணயக்கோட்டைகள்



அன்புள்ள ஜெமோ

வெண்முரசுநாவலில் கிராதம் இன்னொருவகை. ஒரே morbid narration ஆகச் செல்கிறதே என்று ந்ினைத்தபோது குபேரலோகம் வேறுமாதிரியாக அமைந்து அழகிய வேறுபாட்டைக் கொடுத்தது

அர்ஜுனன் குபேரனின் இரும்பு, செம்பு, வெள்ளி உலகங்களுக்குச் செல்வதை குறியீடாகவே கண்டேன். அவை நாணயங்களுக்கான உலோகங்கள். கடைசியாகத்தான் தங்க ம்

இரும்புக்கோட்டையில் தங்கத்தாழ். ஆனால் கடைசியாக பொன்னாலான கோட்டையில் இரும்புத்தாழ்.

இரும்புக்கோட்டை நீர் போல இருந்தது. செம்பு சூரிய ஒளி போல. வெள்ளி நீரின் ஒளி போல

அந்த விவரணைகள் எல்லாமே அழகானவை. கூடவே பலவகையான குறியீட்டு அர்த்தங்களும் கொண்டவை. முக்கியமான குறியீடு எல்லா வீரர்கள்லும்ம் பேராசை கொண்டவ்ர்களாக மூடர்களாக கோழைகளாக மட்டும்தான் இருக்கிறார்கள் என்பது

குபேரனின் மகன்கள் கூட கோழைகளாகவே இருக்கிறார்கள்


மகேஷ்