/இவன் மீண்டு வரவில்லை என்றால் இந்தத் துயர் இருந்திருக்காது. பிறக்கவில்லை என்றே இருந்திருப்பேன்///
முப்பத்து மூன்றாம் அத்தியாயம் தாண்டி இன்னும் படிக்கவில்லை. ஜாதவேதனின் கெஞ்சல் அவனது மனையாளின் ஆற்றாமை என ஒவ்வொன்றாக உயர்ந்து இறுதியில் இவ்வரிகள் திகைத்து நின்றுவிடவைத்தது.
அருளல்லார்க்கவ்வுலகம் இல்லை என்பது போலப் பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லை என்பதையெல்லாம் மனப்பாடப்பகுதி வழியாக படித்திருந்தாலும், அதை இந்தளவு அப்பட்டமாக காணும்போது பெரும் அச்சம் உருவாகிறது.
அர்ஜுனன் அதிர்ந்து நின்று விடாமல், இதையும் கடந்து செல்வது மட்டுமே ஆறுதல்....
அர்ஜுனன் அதிர்ந்து நின்று விடாமல், இதையும் கடந்து செல்வது மட்டுமே ஆறுதல்....
காளிப்பிரசாத்