Thursday, November 17, 2016

செல்வத்தின் போக்கு

 
 
கிராதம் 26 -

பணவியலில் Time value of Money என்பது பாலபாடம். நாளை வரக்கூடிய பணத்தை விட இன்று கையில் இருக்கும் பணத்திற்கு தான் மதிப்பு அதிகம். அதிலிருந்தே வட்டி என்ற கருத்து உருவாகிறது. ஆனால் வட்டியைப் பெற பிறரிடம் பணத்தை அளித்தாக வேண்டும். நம்மிடமே இருக்கும் பணம் என்பது பயனற்ற உலோகம் மட்டுமே. (செல்வம் என்பது ஓரிடத்தில் நில்லாமல் புழங்க வேண்டும் என்று திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் குபேரனுக்கு சொன்னதாக சொல்வார்கள்)

அர்ஜுனன் அதை மாற்றிபோடுகிறான் -  Money value of Time. காலத்தை செல்வமாக உருவகிக்கின்றான். ஆனால் பிறவற்றின் மூலம் அறியும் நமது காலம் என்பதே கணம்கணமாக பெருகுகிறது. இதுவும் ஒரு மாயை. சிறுவர்களை அந்த ஆட்டத்தில் சிக்கவைத்து மேலே செல்கிறான்.
 
மதுசூதன் சம்பத்