அன்புள்ள
ஜெ
வெண்முரசின்
குரூரமான நாவல். ஆரம்பத்திலேயே அது அழுக்கிலும் ரத்தத்திலும்தான் தொடங்கியது. ஆனால்
நரகச்சித்தரிப்பு எல்லாம் ரொம்பவே ஓவர் என நினைக்கிறேன்.
இந்நாவலை
மகாபாரதத்தில் எங்கே வைக்கிறீர்கள் என தெரியவில்லை. மகாபாரதட்தில் யமன் தண்டு அஸ்திரம்
அளித்தான். அதை தேவையில்லாமல் நீட்டிவிட்டீர்கள் என்னும் எண்ணம் மட்டும்தான் ஏற்படுகிறது
கிருஷ்ணன் அர்ஜுனன் போன்றவர்களுக்கெல்லாம் ஒரு குணாட்திசயம் இருக்கிறது. அதெல்லாம் இதில் தலைகீழாக ஆகிவிட்டது. இந்நாவலை இப்படியே கடந்துசென்றுவிடவேண்டும் என்ருதான் தோன்றுகிறது
சரவணன்