அன்பார்ந்த ஜெ.
வணக்கம் அருச்சுனன் யமலோகம் செல்வது காலனைக் கண்டு உரையாடிப் போரிட்டு பிள்ளையுடன் மீள்வது எல்லாம் அற்புதம். திருவாய்மொழியில் இது காட்டப்படுவதை உங்களுடன்பகி ர்ந்து கொள்கிறேன்.
{“படர்புகழ் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத்திண்தேர் கடவி
சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவன் }
ஆனால் இதுகூடக் கண்ணன் மேல்தான் ஏற்றிக் கூறப்படு கிறது. நன்றி
வளவ துரையன்
அன்புள்ள வளவதுரையன்
இது பாகவதத்தில் உள்ள கதை. மகாபாரதத்தின் அத்தருணத்துடன் இணைத்தேன்
சந்தானகோபாலம் என்றபெரில் இது கதகளியாக எழுதப்பட்டுள்ளது .1745 ல் மாண்டவபிள்ளி இட்டிராரிச்ச மேனோன் எழுதியது
ஜெ