Monday, September 2, 2019

பெருந்தந்தை-3




அன்புள்ள ஜெ

இந்த பத்தாண்டுகளுக்குள் ஆங்கிலத்தில் மகாபாரதத்திற்கு ஒரு புதிய கிரேஸ் உள்ளது. ஆங்கிலம் வழியாக வாசிக்கும் கூட்டம் மகாபாரதத்தை விரும்பி வாசிக்கிறது. அவர்களுக்காக எழுதப்படும் மகாபாரதங்களில் பெரும்பாலானவற்றில் துரியோதனன் பாஸிட்டிவாகவே காட்டப்பட்டிருக்கிறான். இது ஒரு கதைச்சுவாரஸியத்துக்காகவும் டிவி தொடர்களிலிருந்து மாறுபட்டு தெரிவதற்காகவும்தான் என்று எனக்குத்தோன்றியிருக்கிறது. ஆனால் இப்போது பார்க்கும்போது இந்த இரண்டாவது வெர்ஷன் ஃபோக் டிரெடிஷனிலிருந்து வருவது என்று தோன்றுகிறது. அதில் துரியோதனன் தெய்வ அம்சம் கொண்டவனாகவும் தெய்வமாகவும்தான் காட்டப்பட்டிருக்கிறார். ஆகவேதான் இந்த இரண்டாவது நெரேஷன் இப்போது மேலே வருகிறது. ஆனால் மிகப்பெரும்பாலான ஆங்கில நாவல்களில் துரியோதனன் நல்லவன், சதியால் வீழ்த்தப்பட்டான் என ஒரு எளிமையான வெர்ஷனைச் சொல்கிறார்கள். அதாவது கதையை நேராக தலைகீழாகத் திருப்பிக்கொள்கிறார்கள். நீங்கள் துரியோதனனை சிக்கலான பெர்சனாலிட்டியாகக் காட்டுகிறீர்கள். இந்த கிரே ஏரியா இன்னும் அவனை நெருக்கமாக புரிந்துகொள்ளச்செய்கிறது

அன்புடன்

கே. மதுசூதனன்