Monday, September 2, 2019

சம்வஹை




அன்புள்ள ஜெ

சம்வஹை என்ற பெயரை பார்த்தேன். அது காற்றைக் குறிக்கிறது. தீயை ஏற்றிச்செல்லும் காற்று. நான் அந்தக்கதாபாத்திரத்தை வாசிக்கையில் அது எதை ஏற்றிச்செல்லும் காற்று என்று எண்ணினேன். தீயை ஏற்றிச்செல்வது. தீயின் எடை அவ்வாறு முடிகிறது. இந்தத்தீ சத்யவதியின் தீ. அவளுடைய குலத்தவள் அந்தப்பெண். சத்யவதியை ஏற்றிக்கொள்பவள். இந்த அர்த்தம் எனக்குப்பிடித்திருந்தது. நீங்கள் நினைக்காவிட்டாலும் இதை நான் வைத்துக்கொண்டேன்

எஸ்.ராஜலட்சுமி