அன்புள்ள ஜெயமோகன் சார்,
நீர்ச்சுடர் 58ஆம் அத்யாயத்தில் குந்தி கர்ணன் தனது மகன் என்று கூறும் காட்சியை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். குந்தி தருமரிடம் "கர்ணன்தான்
எனது முதல் மகன். இந்த குருஷேத்திர வெற்றி நான் இரவல் வாங்கி அளித்தது" என
கூறி அவள்பாட்டுக்கு கிளம்பிவிட என்ன இவ்ளோதானா? என மனம் எண்ணியது. " யட்ஷி உறையும் இடம்" என்னும் உங்கள் பதிவை படிக்கும்போதே நீர்சுடரில் யார் யார் யட்ஷி ? எப்டி அவர்களின் நடவடிக்கை இருக்கும் ? என தீவிரமாக சிந்தித்து இருக்கிறேன். இப்போது யோசிக்கும்போது ஜாலி தாமஸ்
பிடிபட்ட பின்தான் அவளின் முகம் விகாரமாக ஆரம்பித்தது. ஆனால் போர் நடக்கும்போதே
கவரவ, பாண்டவர்களின்
துணைவிகள் மன அழுத்தத்தில் விகாரமாகி இருக்கிறார்கள். வண்ணகடலில் வந்த குந்தி
நீர்ச்சுடரில் எப்டி இருக்கிறாள்? என என்னும்போது
நெஞ்சு கனக்கிறது.எல்லாரையும் ஆட்டிப்படைத்த யட்ஷி அவர்களின் ரத்தத்தை
குடித்துவிட்டு வெளியேறிவிட்டாள்.
ஜெயமோகன் சார்,நீர்க்கடன் என்பது
எனக்கு மிகவும் அந்நியமானது. பத்து வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு ஜோசியம் பார்க்க செல்லும்போது ஜோசியர் கட்டணம் வாங்காமலே
எனது கதையை கேட்டு எனது தாய் தகப்பனுக்கு நீர்க்கடன் செய்யசொன்னார். எனக்கு
அவர்கள் தெரியாது என கூற "அப்பா,அம்மா " என்று கூறி செய் என்றார். நான் அவர்கள் உயிரோடு இருந்தால்
தப்பாகுமே என்ற எண்ணத்தில் செய்யவில்லை. செய்யவேண்டும் என்று தோணவும் இல்லை. செய்யணும்.
துரியோதனன் பிறப்பின் போது அஸ்தினபுரி முழுதும்
காகங்கள். அவர்கள் யாருடைய மூதாதைகள் ? இன்று கங்கைகரையில்
அவ்வளவு காகங்கள். நீர்க்கடன் ஏற்றபின்னும் அவர்கள் மீண்டும் பிறப்பார்களா? ,அபிமன்யு இப்போதும் முந்திக்கொண்டு நீர்க்கடன் செலுத்தும் முன்னேயே புழுவாக
ஆகியிருக்கிறானே,அதுவும்
பிருகத்பலனோடு என
யோசித்துகொண்டிருக்கிறேன். நான் படிப்பதற்கு
மிகவும் அஞ்சிய நாவல்.ஆனாலும்
எதோ ஒரு பீதியோடு படித்துகொண்டிருக்கிறேன்.
நன்றி .
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்