Monday, November 14, 2016

குரூரமான சித்திரங்கள்



அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவல்களில் கிராதம் அளிக்கும் பதற்றமான மனநிலை இதற்கு முன்னர் வந்ததே இல்லை. இதிலுள்ள குரூரமான சித்திரங்கள் ஒரு காரணம். அதைவிட இந்த கதை நம்பிக்கைகளை உடைக்கிரது. மனசு எவ்வளவு ஆழமானது, அதில் எந்த அளவுக்கு கசப்பும் விஷமும் கிடக்கிரது என்பதைக்காட்டுகிறது. டிப்ரஸிவ் என்றுதான் சொல்லவேண்டும்

ஆனாலும் வாசிக்கவே தோன்றுகிறது. இந்தவகையான சித்தரிப்புகளுக்கு நவீன இலக்கியத்தில் இடமிருக்கலாம். மகாபாரதத்திலே இதெல்லாம் எதற்கு. இதையெல்லாம் வேண்டுமென்றே திணிக்கிறீர்கள் என்றும் தோன்றியது


ராம்சந்தர்