Wednesday, November 16, 2016

கிராத வணிகம்



எழுத்தாளர் அவர்களுக்கு

http://www.jeyamohan.in/92117

இன்றய குபேரனின் பகுதியை ஒரு மென் சிரிப்புடனே படித்து வந்தேன்.

கையில் இருக்கும் ஒரு காசின் பல் பிம்பங்கள் தான் மற்றனைத்தும். அவை பெருகிக்கொண்டே இருக்கும்.

" செல்வமென்பது நம் கையில் உள்ள ஒற்றைக் காசுதான். ஒற்றைக் காசின் மடங்குகள்தான் இப்புவியிலுள்ள அனைத்துச் செல்வமும். " :P

எழுத்தாளர் கள் கூட மறைமுகமாக மகாபாரதம் எழுதி நீங்கள் ஜல்லி அடித்து கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

இன்றைய நிகர் வாழ்க்கையும், இன்று நிகழும் அரசியல்களும், அந்த அந்த சமயத்தில், தொடர்ந்து.. கறாராகவே கூட பேசப்படும் ஆக்கமாகவும் வெண்முரசு இருந்து வருகிறது.

தீவிரமாக பசு வதை பற்றி செய்தி தளங்களும் தொலைக்காட்சியும் அங்கலாய்த்த பொழுதில் கிருஷ்ணன் பாஞ்சால சபையில் வேள்வி பலிகள் பங்கிடப்படும் சூட்ச்சமத்தின் கதையை கேட்டு அமர்ந்திருந்தான். பின்பு ஒரு சமயம் குரு நிலைகளில் பெண்களின் பங்கு வந்தது. இன்று குபேரனை உணரும் ஆர்ஜூணன்.

இவைகள் மட்டும் அல்ல அதற்க்கு ஒரு பட்டியலயே தரலாம். இப்படி நிகழும் காலத்திலேயே படைப்பு நிகழும் அரசியலை பேசித்தான் வருகிறது. வெண்முரசு மட்டும் அல்லாமல் உங்கள் தளத்தை தொடர்ந்து படிப்பொருக்கு அவை பேச படாமல் இராது என்பது தெரிந்து இருக்கும். சரி அதெல்லாம் உண்மையாக படிப்பவர்களுக்கு தானே.

ஒரு சுவாரசியம் என்றால் கதை அந்த நேரத்தில் அங்கு வந்து அமர்ந்தது செயல்படுகிறது.. இது என்ன நிமித்தமோ, பகவானின் சங்கல்பமோ ?!?!  :D

இதை யாரும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒரு குறிப்பாக மட்டுமாவது இருக்கட்டும் என்று இந்த கடிதம்.

செய்தியும் அரசியலும் மட்டும் எழுத்தாளரிடம் எதிபார்பவர்கள் மசாலா தடவி ஜல்லி  அடிக்க உபயோக படட்டும்.

நமக்கு வெண்முரசில் அதற்க்கு மேலும் பல வகை உள்ளது அனுபவிக்க. பெருகட்டும்.

நன்றி
வெ. ராகவ்