Wednesday, November 23, 2016

ஞாதா



ஜெ

அர்ஜுனன் இரு வாயில்களை இரு வழிகளில் கடந்துசெல்வது அருமை. வருணனின் இரு பயங்கரமுகஙக்ள் ஒன்று மூதேவியன்னை. இன்னொன்று நாகம். இரண்டுக்கும் அவன் இரண்டுபதில்களைக்கொடுக்கிறான். வாசகனின் எதிர்பார்ப்பைக் கடந்துசெல்கிறது அவை

அன்னைகேட்கும்போது எதைக்கொண்டுசெல்வான் என்று தோன்றியது. எதையும் கொண்டுசெல்லவில்லை. சரி நாகம் கேட்கும்போதும் அப்படித்தான் செல்வான் என நினைத்ததுமே அவன் அகங்காரத்தைக் கைகொண்டபடிச் செல்கிறான்

அறியும்நிலை ஞாதா என்று வேதாந்தம். அது இல்லாமல் அறிவே இல்லை. அதைத்தான் அவன் கொண்டுசெல்கிறான்

சாரங்கன்