Tuesday, November 22, 2016

பொன்னின் கதை

ஜெ

குபேரனின் கதையை வாசிப்பது ஒரு வகை கனவு அனுபவம். அர்ஜுனனின் பயணங்கள் பலவகையானவை. உலூபி, சித்ராங்கதை போன்ற பயணங்களில் எல்லாம் பெண் உறவு என்பதன் நுட்பங்களைத்தான் காணமுடிந்தது

ஆனால் குபேரனின் கதை ஒரு சிறுவர்கதையின் உற்சாகத்துடன் இருக்கிறது. புராணங்களில் எப்போதுமே ஒரு சிறுவர்கதை ஒளிந்திருக்கும். உண்மையில் வெண்முரசில் அந்த அம்சம் கூடிவரும்போதுதான் தனி அழகு வெளிப்படுகிறது என நினைக்கிறேன்

அதோடு அர்ஜுனன் நரகத்துக்குப்போன சர்ரியலிச பகுதிக்கு வெளியே வந்து இந்த குழந்தைக்கதையுலகை மாற்றாக அமைத்திருப்பது மேலும் அழகாக உள்ளது

மணிகண்டன்