Thursday, November 24, 2016

அளிதேடி



பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

அர்ஜுனன் பாடும் ரிக்வேதச் செய்யுளில் "உன் அளிதேடி இதோ வந்துள்ளோம்" என்ற வரியில் உன் அளிதேடி என்பது உன் அடிதேடி என்பதா? அல்லது உன் அளிதேடி என்பதற்கு வேறு ஏதேனும் பொருள் உள்ளதா?

அன்புடன்,

அ .சேஷகிரி.
அன்புள்ல சேஷகிரி
வெண்முரசு கூடுமானவரை தனித்தமிழில் எழுதப்படுகிறது. உண்மையில் தனித்தமிழ் இயக்கம் ஐம்பதாண்டுகளுக்கு முன் உச்சம் கொண்டிருந்த காலகட்டத்திற்குப்பின் இப்படி தனித்தமிழில் எந்தப்படைப்பும் எழுதப்படவில்லை. சொல்லப்போனால் அவர்களே கூட சம்ஸ்கிருதம் அறியாமல் தமிழ் எனக்கருதி கையாண்ட சொற்கள்கூட இங்கே தவிர்க்கப்பட்டுள்ளன
ஆகவே இதிலுள்ள சொற்கள் புரியவில்லை என்றால் கூகிள் பக்கத்தில் வெட்டி ஒட்டி தேடுவது நல்லது. அளி என்றால் கருணை

இத்தனை தூயதமிழை இத்தனைபேர் படிப்பது, அதிலும் தமிழ்க்கல்வியே அற்றுப்போயிருக்கும் சூழலில், மிக நம்பிக்கை அளிப்பது

ஜெ