Thursday, November 17, 2016

மெய்ப்பொருள்




கண்களை கவர்ந்து இழுப்பதற்கு வண்ணங்களைக்கொட்டி வரையப்படும் ஓவியங்கள் வண்ணத்திற்கு உள்ளே இழைந்தோடும் உயிர் ஓட்டத்தை காட்டும்போது காண்பவர் கண்கள் நிலைத்து உயிர் பறப்பதுபோல கற்பனைபயில் கவர்ந்து இழுக்கும் கிராதம் 39 கற்பனைக்குள் உயிர்பெறும் உண்மைகளின் தரிசனத்தால் உள்ளுக்குள் உள்ளே என்று மலரவைக்கிறது. 

வெகுதொலைவிலே வெள்ளிமின்னல்போல அலையடிப்பாகி பனிபோல குளிர்ந்து இருக்கும் குபேரபுரியின் சுவர்களில் கந்தவர்களும் தேவர்களும் கண்களை மின்னவிட்டுப்பதிந்துவிடுவார்கள் என்றால் மனிதன் எம்மாத்திரம். எங்கோ ஒரு ஆழத்தில் மனிதன் அது கந்தர்வகளுக்கு உரியது தேவர்களுக்கு உரியது என்று அணுகமுடியாத தொலைவில் உள்ளது, இருக்கும் நிலையில் இருந்து வெளியே இழுத்து விட்டுவிடும் என்று விலகி இரு என்று அணுகக்கூடாது என்று இருக்கிறான். 

எதோ ஒரு கணம் ஏதோ ஒரு கணம் ஒருசொல் குறிப்பு  பொன்னுலகை நோக்கி அணுகுக என்றும் உணர்த்தும் அந்த தருணத்தில் எது அணுகமுடியாத தூரத்தில் இருக்கிறது என்று மனிதன் நினைத்தானோ அதுவே அவனை தொலைவைக்கடந்து வருக என்றும், வெளியே செல்லத்தேவையில்லை பாதுகாப்பானது அருகணைக என்றும் உணர்ந்து பயணிக்க வைக்கிறது. அப்படிப்பயணிக்கும் மனிதன் தன்னை கந்தர்வன் என்றோ தேவன் என்றோ அறிந்துக்கொள்கிறான் அல்லது அந்த இடத்தில் வைத்து தன்னை பயணியாக்கிறான். 

மனிதன் கந்தர்வன் தேவன் என்று இந்த பொன்னுலகை அருகணையும் பயணத்தில்தான் இருக்கிறார்கள் ஆனால் அதை அடைவது தூரத்தில் இருப்பதால் அர்ஜுனன் அதை மூன்றாவது வாயில் என்று அருகின்றான். 

மூன்றாவது வாயிலை தாண்ட இலக்கு இருந்தாலும் முதல்வாயிலில் வடிக்கட்டுதல் நடக்கின்றது. முதல்வாயில் இரும்பால் ஆகி மனிதனை அறியாமையில் தாமசத்தில் வைத்து அலைகழிக்கவிடுகிறது. பெரும்பூதத்தோடு மல்லாட வைக்கிறது. தரம் அறியச்சொல்கிறது. பொருளுக்கு மதிப்பு பொருளால் அல்ல என்பதை கற்கச்சொல்கிறது.

எப்பொருள் எத்தனைத்தாயினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு-என்கிறது திருவள்ளுவம்.

துலாவின் கல்லுக்கு நிகர் பொருளே வைக்கப்படுகிறது. கல்லும் பொருளும் பணத்தால் பொருள்படுகிறது. இந்த இருண்ட கதவுக்கு முன்னேயே உலகம் உழன்றுக்கொண்டு இருக்க அர்ஜுனன் மட்டும் அந்த பெரும்பூதத்தை தலையும் இடையும் சொரியவைத்து தாண்டுகின்றான்.

இருட்கதவில் இருந்து முன்னேறும் அர்ஜுனன் தாமிரக்கதவாகிய ஒளிக்கதவை திறக்க முனைகிறான். இங்கு கல்லில்லை பொருள் இல்லை அறியாமை இல்லை, நுண்மதியாளர் புழங்கும் இடமாக அது இருக்கிறது. எதையும் அங்கு சுமக்கவேண்டியது இல்லை அறிவின்மூலமாகவே ஆடவேண்டும், அறிவில் பிழை ஏற்பட்டால் சுட்டுக்கொள்ளவேண்டும் ஏன் எரிந்துக்கூட போகவேண்டிவரும் ஆனால் சரியாக அறிவோடு செயல்பட்டல் கதவு திறக்கும் ஒசைக்கூட எழாமல் உள்ளே நுழைந்துவிடமுடியும். 

அளகாபுரிக்கு செல்லும் பயணத்தில் மனிதன் முதல்கதவை உடல் உழைப்பின் மூலம் தாண்ட முயற்சி செய்கின்றான். இரண்டாவது கதவை அறிவின் மூலம் தாண்டுகின்றான். மூன்றாவது கதவை உள்ளத்தின் ஈர்ப்பை, தன்னுணர்வைக் கட்டுப்படுத்துவன் மூலம் தாண்டுகின்றபான். முதல்கதவில் பூதமாக இருக்கும் வாயில்காப்போன் இரண்டாம்கதவில் அனாலாக இருக்கிறான் மூன்றாம் கதவில் குழந்தையாக இருக்கிறான். பணம் சேரச்சேர மனிதன் அதன் அலையடிப்பில் குழந்தைகளால் தடுக்கப்படும் அளவுக்கு பலகீனனாக ஆகிவிடுவான்  என்று காட்டும் இந்த உத்தி நினைத்து நினைத்து தன்னைத்தான் நோக்கவைக்கிறது. நன்றி.

அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்.