Wednesday, November 2, 2016

வலிகை



கிளை பரவி செல்லும் ஆறுகள் திரும்ப சுனைக்கு திரும்புவது போல இருந்தது பிரக்ஞாதேவி தொடர்பான இந்த நான்குநாட்கள் வெளிவந்த பதிவுகள் .

ஒரு நிகழ்வு  நடக்க , அதனை நிகழ்த்த பலமுன்நிகழ்வுகள் .... ஆச்சிர்யமா இருக்கு , இந்த முன்நிகழ்வு முன்னூறு நூற்றாண்டு முன்பு விருஷ்னிய காட்டிலிருந்து துவங்குகிறது :) ஆக எந்த ஒரு நிகழ்வும் தனியானது மட்டுமல்ல , ஏற்கனவே வடிவமைக்கப்பட்டது  இன்னொன்றை நோக்கி செல்வதற்காக .

வலிகையை இருள்மகளை எனக்கு பிடித்திருக்கிறது . தயங்கும் , குழம்பும் , சோம்பலுறும் இடத்தில் தாங்கி கொள்பவள் . அழகின்மை என ஒன்றில்லை என உணரவைப்பவள் . கிருஷ்ணன் அருஜுனனுடன் உரையாடுவதில் அவள் பிரமாதமாக காட்சி அளித்தாள் .

ஒருவருடன் அவர் ஆழத்துடன் பேசவேண்டுமெனில்  முகத்திலறைவது போல் சொல்வது மட்டுமே சரிவரும் .

இனியசொற்களில் மனம் புண்படாமல் பேசுவது என்பது வீனே , அதுஅசைக்காது .


மாறாக கடின சொற்கள் உடனடியாக விளைவுகளை உருவாக்கும் , அந்த சொற்கள் வர நம் நாவினில் அமர்ந்திருக்க வேண்டும் .

சார் ,
உங்களுக்கு வலிகையின் அருள் நிரம்ப இருப்பதை , உங்கள் சமூக விமர்சன கட்டுரைகளைசற்று கண்திரும்பி பார்த்தாலே அறிந்துகொள்ள முடிகிறது :)

வலிகை ஒரு மதுபானம்னு கூட சொல்லலாம் . அது நாம் யாரென நமக்கு காட்டும் . இதுதான் முக்கியமான அம்சம் என தோன்றுகிறது.
அதன்பிறகு நாம் வேறொருவர் ஆகிடுவோம் . நம்மிலிருந்து நம்மிடமிருந்த  துர் குணங்களை காட்டி அகற்றுபவள் னு சொல்லலாம் , சிலசமயம் இன்னொருவரினின் துர்குணத்தையும் காட்டி அகற்றலாம் , அர்ஜுனனுக்கு நிகழ்ந்ததை போல .

சார் , இப்ப யோசிக்கும்போது நம் அம்மாக்கள் ஒளிமகளாகவும் , அப்பா இருள்மகளாகவும் தோன்றுகிறாங்க :)

குரு அல்லது மனைவி அல்லது காதலி இரண்டும் சேர்ந்த அல்லது இரண்டையும் மாற்றிமாற்றி காட்டும் பிரக்ஞா தேவியாக :) 

ராதா கிருஷ்ணன்