அன்புள்ள ஜெமோ\\
அபஹாரம் பற்றி வாசித்தேன். சோதிடர்கள் சொல்லும் ஒரு சொல் அது. சாதாரணமாக வந்துசெல்கிறது. கிருஷ்ணனுக்கு வந்த அந்த நிலைமையை பல கோனங்களிலே சொல்லலாம். ஒருவகை மனச்சோர்வு நிலை. ஹைப்பர் டிப்ரஷன் என்றும் பைபோலார் சிண்ட்ரோம் என்றும் இன்றைக்குச் சொல்கிறார்கள். முன்பு அதை அபஹாரம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். தப்பான கிரகம் [அனேகமாகச் சனி] பீடிப்பது. அதுதான் பீடை. மூதேவிக்கும் பீடை என்று பெயர் உண்டு. பீடிப்பு என்பதிலிருந்து வந்தது. அதைபுராணமாகவும் சொல்லியிருக்கிறீர்கள். எல்லா கோணத்திலும் அதைச் சொன்னாலும் அது ஒரு பெரிய மர்மமாகவே இருக்கிறது
சாரி