Saturday, August 25, 2018

மைந்தர்கள்




அன்புள்ள ஜெ

செந்நாவேங்கையின் முடிவு வெண்முகில்நகரத்தின் முடிவை நினைவூட்டியது. சாத்யகி பூரிசிரவஸ் இருவரும் போரில் சந்திக்கப்போகிறவர்கள். அவர்கள் இருவரும் விதியால் கோர்க்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கே அது தெரியாது. படிப்படியாக அதைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் அவர்களின் பிள்ளைகளையும் இழுத்துச்செல்கிறார்கள். இந்த நாவல் மகன்களின் கதை. ஆரம்பம் முதலே மகன்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையானவர்கள். தந்தைகள் மகன்களை எப்படி சாவுக்குக் கொண்டுசெல்கிறார்கள் என்பதுதான் இந்நாவல் என நினைக்கிறேன்

அரவிந்த்