Thursday, August 30, 2018

ஊழின் போர்




ஜெ

மகாபாரதத்தின் போர்க்களச் சித்தரிப்புகளுக்கும் வெண்முரசின் போர்க்களச்சித்தரிப்புகளுக்கும் இடையே என்ன வேறுபாடு என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மகாபாரதப்போர்க்களக் காட்சியில் விரிவான போர்விவரணைகள், எவர் எவரை எதிர்கொண்டார், எவரைக் கொன்றார் என்பதுதான் உள்ளது. அது இலியட் போன்ற பழைய காவியங்களின் வழி. வெண்முரசில் போர்க்களத்தின் விரிவான விவரணைகள் மட்டுமல்லாமல் அங்கே விதியின் விளையாட்டும் உள்ளது. சங்கன், உத்தரன், ஸ்வேதன் போன்றவர்கள் எவரால் கொல்லப்படுவார்கள் என்று ஊகிக்கவே முடியாதபடி உள்ளது. உத்தரன் பீஷ்மரால் கொல்லப்படவே வாய்ப்பு. அவன் விழைவதும் அதுதான். ஆனால் அவனை கடைசிக்கணத்தில் எதிர்பாராதபடி ஊடே புகுந்த சல்யர் கொலைசெய்கிறார். ஆச்சரியமான திருப்பம் அது. இப்படி என்ன நடக்கப்போகிறதென்று ஊகிக்கமுடியாதபடி விதிவின் விளையாட்டாக இருப்பதுதான் இந்தப்போர்க்களத்தின் சிறப்புத்தன்மை

ஜெயராமன்