Sunday, August 26, 2018

விராடர்




அன்புள்ள ஜெ

மைந்தர்களின் கதைகளாகச் சென்றுகொண்டிருக்கும் வெண்முரசில் முக்கியமான ஒரு தந்தையின் கதைபூடகமாகவே விடப்பட்டுள்ளது. விராடர் குலாடகுடியின் மைந்தர்களைப்பற்றி என்ன நினைத்தார்? அவர்களுக்கு அவர்மேல் எந்த மதிப்பும் இல்லை. அவர் குடியில்மூழ்கிக்கிடக்கிறார். அந்தப்பிள்ளைகள் தேடிய அந்தஸ்தை அவர் அளிக்கவே இல்லை. ஆனால் அவர் மடியில் தலையறுந்துகிடந்து சங்கன் சாகிறான். அவரை குருதியால் நனைக்கிறான். அப்போது அவர் நெஞ்சிலறைந்து அழுகிறார். அவருடைய கோழைத்தனத்துக்கும் கையாலாகாத்தனத்துக்கும் அவன் அளிக்கும் பதில் அது

சரவணன்