Tuesday, August 21, 2018

போர்




போர்தொடங்கிவிட்டது. பெரிய அளவிலான வர்ணனைகள் ஏதுமில்லாமல் நேரடியான காட்சிகளாக உள்ளன. அதனால் அவற்றை கண்ணால் பார்ப்பதுபோல உள்ளது. போரின் அழிவுகள் இன்னும் வரவில்லை. ஆனால் அது ஒரு காவியத்தன்மையை நேரடியாகக் காட்டாமல் யதார்த்தமாக காட்டும் என தெரிகிறது. நேரடியாக விரிவாகச் சொல்லும்போது ஏற்படும் கிராண்டியர் தான் காவியத்தன்மையை உருவாக்கும் என்று நினைக்கிறேன். வெவ்வேறு கதாபாத்திரங்களின் வழியாக வெவ்வேறு கோணங்களில் போர் சொல்லப்படுகிறது. சஞ்சயன் சொல்லும்போது உணர்ச்சி அற்ற இம்பெர்சனல் நரேஷனாக உள்ளது. அதையே சங்கன் சொல்லும்போது பெர்சனல் நரேஷனாக ஆகிவிடுகிறது

ராஜ் அருண்