Thursday, August 23, 2018

உவமைகள்



ஜெ

போர் ஒரு புறநிகழ்வு. அதை நாவலில் கண்ணுக்குக் காட்டுவதென்பது மிகப்பெரிய சவால். ஏனென்றால் நம்மில் பலர் போரைப் பார்த்திருக்கவே மாட்டோம். டால்ஸ்டாய் போன்றவர்கள் போரைச் சித்திரித்தார்கள். ஆனால் அங்கே பெரும்பாலான மக்களும் போரைப்பார்த்தவர்கள்தான். டால்ஸ்டாயின் போர்ச்சித்திரிப்பில் பெரும்பகுதி எனக்கு வெறும் செய்திகளாகவே மனசில் இருந்தது. அவருடைய உவமைகள்தான் என் மனதில் காட்சிகளை அளித்தன

வெண்முரசில் படைகளையும் போரையும் சொல்லும் உவமைகள் வழியாகவே நான் போரை காட்சியாக ஆக்கிக்கொள்கிரேன்

தாமீனை பசித்த மீன்கள் கொத்தித் தூக்கி குதறுவதுபோல அம்புகளால் அலைக்கழிக்கப்பட்டது அவன் உடல் .

இளவரசன் சுக்ரனை பீஷ்மரின் அம்புகள் நீர்பட்ட அகல்சுடர் என துளைத்து துள்ளி நடமிட்டு  சரியச் செய்தன.

உலோகநீரலை ஒன்று உலோகநீரலையைச் சந்திப்பதுபோல

போன்ற வரிகள் எனக்கு போரின் பிரம்மாண்டத்தைக் காட்டின

மகேஷ்