Monday, August 27, 2018

மரணசங்கீதம்



ஜெ

சாத்யகியும் பூரிசிரவஸும் சேர்ந்து கேட்கும் அந்த மரணசங்கீதம் திகைப்பூட்டுகிறது. மரணசங்கீதம் என்று சொல்லலாம். ஆனால் அதை கேட்கும் அந்தக் காட்சி சாதாரணமான ஒன்று அல்ல. பல ஆயிரம் பிணங்கள். அவர்களுக்கு சாவு ஒரு பொருட்டே கிடையாது. அவர்கள் இயல்பான ஒருவேலை போல அதைச் செய்கிறார்கள். அந்தப் பிணங்களின் நடுவே பாடிக்கொண்டே செல்கிறார்கள். பாட்டு மொழியில்லாத ஒரு ரீங்காரம்போல் இருக்கிறது. அது மொழியாக இருக்கமுடியாது. எந்த உணர்ச்சியும் அதில் வரமுடியாது. ஏனென்றால் அது வெறும் சாவுதான். அதில் துக்கம் இல்லை. வெற்றிக்களிப்பும் இல்லை. எந்தவிதமான கருத்துக்களும் இல்லை. வெறும் சாவு என்கிற அர்த்தமில்லாத விஷயத்தைப் பாட்டாக ஆக்குவதுதான் அது

ராஜேஷ்