Monday, February 4, 2019

குந்தியின் குணம்



வணக்கம் சார்,

கர்ணனின் வார்த்தைகளாக  கார்கடல்-28இல் ரும் வரிகள் “அன்னையே, என் இளமையில் நான் எண்ணித் துயருற்ற ஒன்றுண்டு. என்னைக் கருவுற்றபோது என் அன்னை எத்தனை முறை என்னை கசந்திருப்பாள், எப்படியெல்லாம் என்னைத் துறந்து சொல்பெருக்கியிருப்பாள், நான் பிறந்தபோது நோயுற்ற உடல் உறுப்பொன்றை வெட்டி அகற்றுவதுபோல் என்னை அகற்றியிருப்பாள் என்று. அவ்வெறுப்பை எண்ண எண்ண என் உடலும் உள்ளமும் இருப்பும் கசக்கும். விழிநீர் வடித்து இருளுக்குள் தனித்து படுத்திருக்கிறேன்". இந்த வரிகள் நெஞ்சை அடைப்பது போல் இருந்தது. கொடுமையான வரிகள். கைவிடப்பட்ட குழந்தைகள் அனைவரின் வார்த்தைகள் அவை. ஒரு தாயாக அந்த வார்த்தைகளை கேட்டும் தான் வாங்கி செல்ல வந்த  வாக்குறுதிகளை பிடிவாதமாக வேறு வேறு வார்த்தைகளில்  வாங்கி செல்கிறார் குந்தி. தான் கைவிட்ட மகனை எடுத்து வளர்த்த ராதையை கூட தனக்கு நிகராக வைக்க மறுக்கிறது அவர் மனம். தெரிந்தோ தெரியாமலோ துரியோதனன் கர்ணனை பல இடங்களில் தன்னை விட உயர்வாகவே நடத்துகிறார். எல்லோருமே தன்னிடம் உள்ள தீய எண்ணங்களுக்கு மாற்றாக பல நல்ல குணங்களை இயல்பாகவே வைத்துஇருக்கிறார்கள். குந்தியிடம் மட்டும் பதவியாசை ஒன்று மட்டும் தான் தெரிகிறது. அவரிடம் வெளிப்படும் அத்தனை பாச வார்த்தைகளுக்கு பின்னும் சுயநலமே வெளிப்படுகிறது.

ஆனால் கர்ணனின் கூற்றாக வரும் வார்த்தைகள் உச்சம் சார் .“அவனுக்கு நான் யார் என்பதல்ல, எனக்கு அவன் யார் என்பதே நான் எண்ணுவது. எனக்கு அவனே முதன்மையானவன்".

உதவி வரைத்தன்று உதவி உதவி 
செயப்பட்டார் சால்பின் வரைத்து என்பது தானே உண்மை.

நன்றி,
ரஜினிகாந்த் ஜெயராமன்.