Thursday, February 7, 2019

அபிமன்யூ


அன்புள்ள ஜெ

அபிமன்யூவின் சாவு அவன் அறிமுகம் ஆன நாள் முதலே நாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒன்று. ஆனால் அவனுடைய கதாபாத்திரம் இந்நாவல்களில் மிகத்தெளிவாக வரையறை செய்யப்பட்டிருந்தது. மூலத்தில் அவன் ஓர் அறியாச்சிறுவன்.  ஆனால் வீரம் மிகுந்தவன். அவனுடைய கதாபாத்திரம் பெரிதாகச் சொல்லப்படவில்லை. அந்த குணச்சித்திரம்தான்  ஆனால் வெண்முரசில் அவன் துடுக்கும் கட்டற்றதன்மையும் கொடூரமும் குழந்தைத்தன்மையும் கலந்த ஒருவனாக இருக்கிறான். டீனேஜ் பையன்களிடமிருக்கும் குரூரமான குழந்தைத்தனம் அவனிடம் இருக்கிறது. எல்லா எல்லைகளையும் மீறிச்செல்கிறான். புகழ் ஆசை கொண்டிருக்கிறான். அறநெறிகளில் மதிப்பு கிடையாது. எவர்மேலும் பெரிய மரியாதை ஏதும் இல்லை. பயமும் இல்லை. போர்க்களத்தில் அவன் கொடூரமான கொலைக்காரனாக இருப்பதற்கான காரணம் இதுதான். அவனுடைய இந்த மூர்க்கமான தன்மைக்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம். ஆனால் நாம் நன்றாக அறிந்த பையன்களைப்போல் இருக்கிறான் அபிமன்யூ


ராஜசேகர்