Tuesday, February 12, 2019

அறவோன் என..



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்."  இந்த குறள் என்னை உறுத்துவது.  திருவள்ளுவர் இப்படி சொல்வது எந்தவகையில் நியாயம் என்பது.  அவர் தன் வாழ்கையில் அவ்வாறான எவரையேனும் எதிர்கொள்ளாமல் சொல்லியிருக்கமாட்டார்.   அத்தியாயம் 40-41.  யுதிஷ்டிரரின் பேச்சுக்கள் அக்குறளை நினைவுபடுத்தியது.  அவர் அபிமன்யூவின் இறப்பில் பீமனைப் போல் தந்தையாக உணர்வுப்பூர்வமாகவும் இல்லை எதையும் பொருட்டென கொள்ளவேண்டிய  அவசியம் இல்லாத மெய்மையின் முனிவரும் அல்ல அவர்.  அவனை மாவீரன் என்று கருதினேன்.  உங்களை மாவீரர்கள் என்று கருதினேன்.  இது இளையயாதவனின் போர் என்றெல்லாம் சொல்கிறார்.  “அருந்தவம் இயற்றி அறியவேன்டும் ஞானத்தை. அதன் பின் மேலும் தவம் இயற்றி அந்த ஞானத்தில் அமையவேன்டும். நாம் அறிந்தவற்றை வெற்று ஆணவமாக ஆக்கிக்கொண்டவர்கள். நாம் அடைந்தவை அனைத்தும் பொய்யே. இப்போது அதை அறிகிறேன்.”  கண்ணனின் அருகே இருக்கும் வாய்ப்பைப் பெற்றவராகவும் இருக்கிறார்.  மதத்தின்  புனித நூல்களை மட்டுமே படித்து கடவுளை தான் அறிந்திருப்பதாகவும் அவரை ஏதோ தம் சட்டைப்பையில் வைத்திருப்பது போலவும்  பேசும், தம்மை ஆன்மிகரென்றும் கடவுளின் ஆட்கள் என்றும் கருதிக்கொள்ளும் மதவாதிகளை, கடவுளின் நூல் என்று சொல்லிக்கொண்டு அதைக் கொண்டே கடவுளை தன்னை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ளும் சிலரையும் கூட நினைவுபடுத்தின இந்த அத்தியாயங்கள். .  


அன்புடன்
விக்ரம்
கோவை