Friday, February 8, 2019

நாகச்சிக்கல்




அன்புள்ள ஜெ

ஜயத்ரதனுக்கும் அவன் அப்பாவுக்குமான உறவு வெய்யோனில் வந்தது. அதன்பின் அதன் மீதிக்கதை இப்போதுதான் வருகிறது. அதே ஒழுக்கும் சிக்கலும் கொண்டிருக்கிறது. அவர் தன் தமையனைக் கொன்றது அப்போது ஒரு கோணத்தில் வந்தது. இப்போது அது அவருடைய ஆணவத்தின் வெளிப்பாடாக வருகிறது. ஆழ்மனமே நாகங்களின் உலகம். அந்த ஆழ்மன ஆணவமே அவருடைய கைகள். அவரை மீறி அக்கொலையை நிகழ்த்துபவை அந்தக்கைகள்தான். அவரை விடாது தொடர்பவை. அவரை ஆட்டிப்படைப்பவை அவை. அவைதான் அவனையும் கொல்லப்போகின்றன. ஆனால் அவர் நாகங்களிடமே பாதுகாப்பு தேடுகிறார். இந்த மூன்று அத்தியாயங்களின் படிமங்களின் சிக்கலை நீவிச்சிக்கெடுத்து வாசிக்க நாலைந்துமுறை வாசிக்கவேண்டியிருந்தது

எஸ்.பாலகிருஷ்ணன்