Sunday, February 10, 2019

கதைசொல்லிகள்




ஜெ

மூன்றுகதைசொல்லிகளாலும் மாறிமாறிச் சொல்லப்படுகிற கதையின் மாயங்கள் முடிவில்லாதவை. அரவான் சொல்லும் கதை நாகர்களின் உலகைச்சார்ந்ததாகவும் ஒருவகையான சைக்கடெலிக் தன்மை கொண்டதாகவும் உள்ளது. ஏகாக்‌ஷர் சொல்லும் கதை உளவியல்சார்ந்தது. உள்ளங்களுக்குள் செல்வது. பார்பாரிகன் சொல்லும் அரக்கர்கதையில் ஒரு மெட்டீரியலிஸ்டிக் தன்மை அமைந்துள்ளது. ஒரே கதையின் மூன்று பக்கங்களை அவை காட்டுகின்றன. ஒரே கதை மூன்றுக்குள்ளும் நுழைந்து வண்ணம் மாறி மாறிச் செல்கிறது. இந்நாவலின் உச்சம் என்பது இதுவே

சாரங்கன்